மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இன்றைய சினிமா சிந்தனை!

இன்றைய சினிமா சிந்தனை!

Roland Emmerich

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் பணியைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறார் இயக்குநர் Roland Emmerich. பல்வேறு இயக்குநர்கள் அதேபோல் கதையை இயக்கி தோல்வி கண்டிருந்தாலும், இவரது பாணியில் தோன்றும்போது அதன் தரம் வேறு மட்டத்துக்குச் செல்கிறது என்பதே உண்மை. உதாரணமாகக் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான Godzilla திரைப்படம் மக்களின் எதிர்பார்ப்பினை முதலில் அதிகம் ஏற்படுத்தியது என்றாலும், 1998ஆம் ஆண்டே Roland Emmerich-ஆல் இயக்கப்பட்ட திரைப்படத்துக்கு இணையாக இருக்கவில்லை என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. அந்த அளவுக்குத் திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத்தில் சிறப்பான முயற்சிகள் செய்து திரைப்படங்களை இயக்குகிறார் இவர்.

Independence Day, Godzilla, The Day After Tomorrow, 2012, Independence Day: Resurgence, White House Down, 10,000 BC என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் Roland Emmerich. இவரது திரைப்படங்களைப் போலவே இவரின் பல்வேறு சிந்தனைகளும் சிறப்பானவை அதில் ஒரு சிந்தனை கீழே...

நான் திரைப்படம் வெற்றியா, தோல்வியா எனச் சிந்திப்பது கிடையாது. ஏனெனில் அது வெளியாகிவிட்டது.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon