மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

பள்ளியில் 40 ஆசிரியர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

பள்ளியில் 40  ஆசிரியர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

ஆந்திராவில் அரச மரம் விழுந்து 40 ஆசிரியர்கள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ஜி.மாடுகுல என்னும் கிராமத்தில் ஜில்லா பரிஷாத் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நேற்று ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஏப்ரல், 18) மதியம் 1.40 மணி அளவில் பள்ளி வளாகத்துக்குள் இருந்த மிகப் பெரிய அரச மரம் திடீரென வேரோடு முறிந்து விழுந்தது. இதில் கூரை இடிந்து பள்ளிக்குள் விழுந்து, 40 ஆசிரியர்கள் படுகாயமடைந்தனர். பள்ளிக்குள் இருந்த நாற்காலிகள் எல்லாம் நொறுங்கின.

அருகில் இருந்த கிராம மக்கள் விரைந்து சென்று அவர்கள் அனைவரையும் ஜி.மாடுகுல ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். இரு ஆசிரியர்களுக்கு காயம் அதிகமாக இருந்ததால், அவர்கள் படேரு அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதற்கிடையில், மனிதவள அமைச்சர் காந்தா ஸ்ரீனிவாச ராவ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி ஏற்பாடு செய்ய மாவட்ட கல்வி அதிகாரி நாகமணிக்கு உத்தரவிட்டுள்ளார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon