மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 20 ஏப் 2017

இரு அணிகளும் ஊழலில் ஊறிய மட்டைகள்: ஜெ.தீபா

இரு அணிகளும் ஊழலில் ஊறிய மட்டைகள்: ஜெ.தீபா

‘சசிகலா, பன்னீர்செல்வம் இருவரும் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 18ஆம் தேதி இரவு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில், தினகரன், சசிகலா மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கவும், இரு அணிகளும் இணைவது குறித்து விவாதிக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர்கள் அறிவித்தனர். இதற்கு பன்னீர்செல்வம் அணியினரும் ‘சசிகலா குடும்பத்தினரை வெளியேற்றியுள்ளது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி’ என்று தெரிவித்துள்ளார். இதனால் கிட்டத்தட்ட இரு அணிகளும் இணையும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கிடையே ஏப்ரல் 19ஆம் தேதி மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘பன்னீர்செல்வம், சசிகலா இருவரும் ஊழல் என்னும் மட்டையில் ஊறிய குட்டைகள். இவர்களால் உண்மையான துரோகம் என்ன என்பதை அதிமுக தொண்டர்கள் அடையாளம் கண்டுள்ளனர்’ என்றார்.

மேலும் பன்னீர்செல்வம் பற்றி கூறும்போது, ‘ஏற்கெனவே திட்டமிடப்பட்டு எழுதி வைக்கப்பட்ட நாடகத்தையே தற்போது பன்னீர் நடத்திக்கொண்டிருக்கிறார். இரட்டை இலை சின்னத்தை முடக்கக் காரணமானவர்களே தற்போது சின்னத்தை மீட்கப்போவதாக நாடகமாடி வருகின்றனர். இரு அணியும் இணைவது பற்றி மக்களிடம் எவ்வித பரபரப்போ, பதற்றமோ சிறிதளவுமில்லை’ என்று தெரிவித்தார்.

வியாழன், 20 ஏப் 2017

chevronLeft iconமுந்தையது