மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

பன்னீர் பழனிச்சாமிக்கு வாக்களிக்காவிட்டால்? – அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

பன்னீர் பழனிச்சாமிக்கு வாக்களிக்காவிட்டால்? – அருண் வைத்தியலிங்கம் (வழக்கறிஞர்)

தற்போது தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலில் நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது வாக்கெடுப்பு எங்கனம் நடத்தப்படும்?

தற்சமயம், அதிமுகவின் சார்பில் முதல்வராக பதவியேற்றிருக்கும் E.பழனிச்சாமி தனது பதவி மற்றும் மந்திரி சபை ஆகியவற்றை தக்கவைக்க, நடக்கப்போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் முக்கிய கதாநாயகர் அந்த கட்சியின் ‘கொறடா’ ஆவார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆணைப்படி, கொறடா, அக்கட்சியில் உள்ள (WHIP) அனைத்து மன்ற உறுப்பினர்களுக்கும் (135) சபாநாயகர் உட்பட எல்லோரும் கட்சியின் விருப்பப்படி, E.பழனிச்சாமி-ஐ ஆதரிக்க வேண்டும் என்று ஆணையோ/செய்தியோ முறையாக எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் கூறிவிடுவார். அதுபோல சட்டசபையில் அடுத்த பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட திமுக (89) வின் கொறடாவும், தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கூறிய அறிவுரையான, எதிர்த்து வாக்களிப்பது என்ற உத்தரவை உறுப்பினர்களுக்கு அனுப்புவார். 8 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சியும் ஒரு உறுப்பினரைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இப்படித்தான் செயல்படும். அதிமுகவின் மொத்தம் 136 உறுப்பினர்களில் ஜெயலலிதா இறந்து போனதால் அக்கட்சிக்கு சபையில் 135 உறுப்பினர்களே உள்ளனர். இதில் சபாநாயகர் மட்டும் கொறடாவின் உத்தரவை அப்படியே கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. அதாவது, சபையில் நாளை அதிமுக எளிய தனிப்பெரும்பான்மை (simple majority)யை நிரூபிக்கும் வாக்கெடுப்பில், 117 உறுப்பினர்கள் மட்டும் ஆதரித்தால் போதும் என்கிற நிலை இருக்கும்போது, (அதாவது நமது சட்டசபை 234 உறுப்பினர்களைக் கொண்டது) சபாநாயகர் ஆளுங்கட்சியை/நம்பிக்கை கோரும் கட்சியை சார்ந்த உறுப்பினராய் இருப்பதால், அவர் தனது வாக்கை ஆளும்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கொறடாவின் உத்தரவுப்படி, சபாநாயகர் ஆளும்கட்சிக்கே வாக்களித்து 118 என்று எண்ணிக்கையை உயர்த்தி உரிமை கோரும் கட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

மேலும் அதிமுகவில் தனியரசு, கருணாஸ், தமீம் அன்சாரி எனும் வெவ்வேறு கட்சியின் உறுப்பினர்களும் உள்ளனர். இவர்கள் மூவரும் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களும் அதிமுக கட்சியின் கொறடாவின் உத்தரவுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும்.

இதனடிப்படையில் சட்டசபையில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து கட்சிகளும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தத்தம் நிலையில் இருந்து செயல்பட்டு அதன்படியே நாளை சபையில் முடிவு காணப்படும்.

பன்னீர் பழனிச்சாமிக்கு வாக்களிக்கவிட்டால்?

அதிமுக சபையில் 136 உறுப்பினர்களை கொண்டிருந்தாலும், ஜெயலிதாவின் மறைவினால் 135 உறுப்பினர்களாக உள்ளனர் என்றும், அதில் சபாநாயகர் வாக்கு தனியாக பிரிக்கப்பட்டு அவர் தேவைப்பட்டால் மட்டுமே வாக்களிக்க வேண்டிய சூழலில், தற்சமயம் அதிமுக 134 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. இதில் அக்கட்சியின் கொறடா உத்தரவுப்படி, 134 உறுப்பினர்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்க வேண்டும். ஓபிஎஸ், மாபா பாண்டியராஜன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றுவரும் சசிகலா அறிவித்திருந்தாலும் நீக்கப்பட்ட அறிவிப்பு முறையாக அதிகாரபூர்வமாக, எழுத்து மூலமாக சபாநாயகருக்கும், அவரது காரியாலய செயலாளருக்கும் அனுப்பி அது ஏற்றுக் கொள்ளப்படாத வரையில், இவர்கள் இருவரும் அதிமுக சபை உறுப்பினர்களே. ஆகவே, ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டாலும் ஓபிஎஸ் பிரிவு பத்து உறுப்பினர்களும் அவர்களின் கொறடா உத்தரவுப்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்க மறுத்து அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தாலோ, எதிர்த்து வாக்களித்தாலோ அவர்களின் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். இதில் ஓபிஎஸ் பிரிவினர் ஆதரித்து வாக்களிக்காமல் வேறு வகையில் எதிராக செயல்பட்டாலும் அன்றைய தினமே அவர்களின் சபை உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 2004 ஆண்டின் புதிய திருத்தமான 10வது சட்ட இணைப்பின்படி தடுக்கப்படுகிறது. அதாவது, அதிமுக கட்சி அடுத்த 15 தினங்களுக்குள் கொறடா உத்தரவுக்கு எதிர்த்து சபையில் செயல்பட்டதை மன்னிப்பதாக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தால் அவர்களின் உறுப்பினர் பதவி இழக்காமல், தொடர்ந்து (UNATTACHED) தொடர்பற்ற உறுப்பினர்களாகவே சபையில் தொடரலாம் என்று இந்த சட்டம் கூறுகிறது.

ஆக, 134 உறுப்பினர்கள் கொண்ட எண்ணிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி 118 வாக்குகள் பெற்றால் அக்கட்சி ஆட்சி தொடரும். 134 உறுப்பினர்களில் 118 வாக்குகள் மட்டுமே பெற்று மீதம் 16 வாக்குகள் பெறமுடியாமல் போனால், அது கொறடாவின் உத்தரவுக்கு எதிரானது எனக்கூறி 16 உறுப்பினர்கள் பதவியையும் இழக்க வைக்கலாம்,

இதில் 134 ல் 89 உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கும் மீதம் 45 உறுப்பினர்கள் ஓபிஎஸ்க்கும் என்று பிரித்தால், 2004 ஆம் ஆண்டு கட்சி தடை தாவல் சட்டத்தின் படி, யாரும் உறுப்பினர் பதவியை இழக்க மாட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க முடியாது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி 116 அல்லது 117 சபாநாயகர் வாக்கு உள்பட பெற்றாலும் ஆட்சியை தொடர முடியாது. இதேசமயம், ஒரு வாதத்திற்காக கூறலாம் என்றால் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் ஒருவர் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தால் இந்த ஆட்சி தொடரும். அதுபோல ,எடப்பாடி பழனிச்சாமி 109 வாக்குகள் பெற்ற நிலையில் 1 முஸ்லீம் லீக், 8 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் என 9 நபர்களும் ஆதரித்தால், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தொடரலாம் காங்கிரஸ் (கடிதம் மூலம் அல்லது வாக்களிப்பு) மொத்தம் 8 உறுப்பினர்களும் கொரடா உள்பட அவர்களது உத்தரவுக்கு எதிர்த்து வாக்களித்தாலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி இழக்க மாட்டார்கள். அதேபோல எடப்பாடி பழனிச்சாமி 110 வாக்குகள் அதிமுகவினாலும் 6 உறுப்பினர்கள் காங்கிரசிலும் முஸ்லீம் லீக் 1,சபாநாயகர் (1) வாக்குகளை பெற்றாலும் அவரும் பதவி தொடரலாம்.காங்கிரஸ் உறுப்பினர்கள் 2/3 பங்கு விகிதத்தில் பிரித்தால் 8 நபர்களின் சபை உறுப்பினர் பதவிக்கு ஆபத்தில்லை.

சட்டமன்றத்தில் நாளை என்ன நடக்கும்?

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon