மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

காவல்துறைக்கு பன்னீரின் வேண்டுகோள்!

காவல்துறைக்கு பன்னீரின் வேண்டுகோள்!

தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக ஜெயலலிதா மாற்றிவைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினர் மாற்றிவிட வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழக மக்கள் தாங்கள் விரும்பாத ஒரு ஆட்சி அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதற்கு துணைபோகும் தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது மன உணர்வுகளை தெரிவிப்பதற்காகவும், அமைதியான முறையில் யாருக்கும் எந்தவித இடையூறு இல்லாமலும் தங்களது கண்டனத்தை தமிழ்நாடு முழுவதும் தெரிவித்துவருகிறார்கள். அவர்களையெல்லாம் காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்துவைத்திருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

வாக்களித்த மக்களுக்கு தங்களது வேதனைக் குரலை வெளிப்படுத்துதற்கு வேறுவழி தெரியவில்லை. தயவுசெய்து கைது செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களை காவல்துறையினர் உடனே விடுவிக்க வேண்டும். ஜெயலலிதா தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக மாற்றிவைத்திருந்தார். அந்த நிலைமையை காவல்துறையினரே மாற்றிவிட வேண்டாம் என்று அன்போடு காவல்துறையினரை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon