மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

மிஸ்டர் 360 டிகிரி: குவியும் பாராட்டு மழை!

மிஸ்டர் 360 டிகிரி: குவியும் பாராட்டு மழை!

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஏ.பி.டிவிலியர்ஸ் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

இவர் கடந்த 1984ஆம் ஆண்டு தென் ஆப்பிக்காவில் உள்ள பிரிக்டோரியா மாகாணத்தில் பிறந்தார். 2004ஆம் ஆண்டு முதல் தென் ஆப்ரிக்கா அணியில் இவர் விளையாடி வருகிறார்.

கிரிக்கெட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இவரின் ஆட்டத்தை பல்வேறு எதிரணி பந்துவீச்சாளர்களும் புகழ்ந்துள்ளனர். எந்த விதமாக பந்து வீசினாலும் அடிக்கும் ஒரு வீரர் என்பதால் இவருக்கு Mr.360 டிகிரி என்ற செல்லப்பெயர் உண்டு. அவரை கிரிக்கெட் வீரர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஹாக்கி, ஃபுட்பால், ஸ்விம்மிங், டென்னிஸ், கோல்ப், பேட்மிட்டன், என அனைத்து விதமான விளையாட்டிலும் சிறந்த வீரராக விளங்கியவர்.

ஒரு வேலை இந்தக் காரணத்தில் தான் இவருக்கு Mr.360 என்ற பெயர் வைக்கப்பட்டதா என்ற ஒரு கேள்வியும் பெரும்பாலான ரசிகர்களிடம் உள்ளது. பேட்டிங் மட்டுமின்றி பீல்டிங் செய்யும் இவரின் திறமைகள் பல்வேறு போட்டிகளில் பாராட்டப்பட்டுள்ளது. அதே போல் இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட ஒரு வெளிநாட்டு வீரரும் இவராவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். மேலும் பிறந்த நாள் வாழ்த்துக்களும் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சச்சின்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon