மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

இயல்புநிலை திரும்பியுள்ளது : அருண் ஜெட்லி

இயல்புநிலை திரும்பியுள்ளது : அருண் ஜெட்லி

பண மதிப்பழிப்பு விவகாரத்துக்குப் பிறகு தற்போது நாட்டில் பணப்புழக்கம் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தின் (SPMCIL) 11வது ஆண்டு விழாவில் பேசிய அருண் ஜெட்லி, ‘நாட்டில் தற்போது பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் பணப்புழக்கம் இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். இதற்குக் காரணம், ரிசர்வ் வங்கியின் பணம் அச்சடிக்கும் நிறுவனமே. அவர்களின் இடைவிடாத கடின உழைப்பால் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் பணம் சென்றுசேர்ந்துள்ளது. இதன்மூலம் கறுப்புப் பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழித்துள்ளோம். பணப்புழக்கம் சரியாக 7 மாதங்கள் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் சில வாரங்களிலேயே நிகழ்த்திக்காட்டியுள்ளோம். SPMCIL நிறுவனத்தின் ஊழியர்கள் நவம்பர் மாதத்தில் இருந்து வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் உழைத்துள்ளனர். இதனால்தான் நாட்டில் பணப்புழக்கம் சீரானது. இதற்கு முழுக்காரணம் அச்சு நிறுவனங்களே ஆகும்’ என்று கூறினார்.

நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற பண மதிப்பிழப்பு விவகாரத்தில் 15.45 லட்சம் கோடி பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon