மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

நோ ரிசர்வேஷன்! தட்கல் தமிழ்நாடுதான் - அப்டேட் குமாரு

நோ ரிசர்வேஷன்! தட்கல் தமிழ்நாடுதான் - அப்டேட் குமாரு

எடப்பாடி பழனிச்சாமின்னா யாருன்னு கேட்ட நண்பர்கிட்ட விளக்கமா எல்லா டீட்டெயிலும் சொல்லிட்டு, முதல்வரைப் பத்தி தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வமா என் ஷெல்வமேன்னு ஆசையா கேட்டா.... மீம்ஸ் போட மேட்டர் வேணும்ல அதுக்காகத்தான்னு அசால்ட்டா சொல்லிட்டுப் போறாரு. சசிகலாவை கிண்டல் பண்றவங்களைத்தான வாட்ச் பண்றீங்க. எடப்பாடியார் ஃப்ரீயாத்தான இருக்காரு... அப்டேட்டைப் பாருங்க.

//Sathiya Kumar S

எம்எல்ஏக்களை சந்திக்க முதல்வர் எடப்பாடி கூவத்தூர் பயணம் - செய்தி

முந்தாநேத்துவரைக்கும் கூவத்தூர் எம்எல்ஏ கும்பல்ல இவரும் ஒருத்தரா இருந்தாரு..... //

//Indu Rani

நாளை ஹெல்மட் அணிந்து செல்லவும் .. !!//

//Mani Dhanuskodi

பெரியவா சாபம்தான் ஜெ.வோட துர் மரணமாம்!

ஜெ.வோட கருணைதான் அப்பீல் போகாம பெரியவாள காப்பத்துச்சுடா அம்பி!//

//Periyasamy Shanmugam

குரூப்புல டூப்பு - சசி Vs ஓபிஎஸ்

சிரிச்சா போச்சி - எடப்பாடி Vs ஸ்டாலின்

மாத்தி யோசி - மத்த எம்.எல்.ஏ.,க்கள்.

அரசியல் அது இது எது ?//

//ரா புவன்

தூங்கும்போது கனவுலகூட ஆட்சி அமைக்கிறது, அது சம்மந்தப்பட்ட நியூஸாவே வருது //

//Muthu Ram

நாளைக்கு ஸ்டாலின் சிரிச்சே ஆட்சிய கவுத்துடலாம் போலருக்கே. //

//Prince Prinkypas

செங்கோட்டையன் ஆங்கிலம் பேசுறதெல்லாம் இருக்கட்டும்.. அப்படியே மைக்க மோடி பக்கம் திருப்பி ஒரு கேள்வி இங்கிலிஸ்ல கேளு... பதில் சொல்லிட்டா நீங்க செங்கோட்டையன கேலி பன்னலாம் பஜகோவிந்தன்ஸ்....//

//Mohamed Hidayat

CM - OPS

EX CM - OPS

MLA - OPS

இப்ப கொறடா அறிவிப்ப பாத்தா, இனி அதுக்கும் வாய்ப்பில்லை போல//

//Thippu Sulthan K

பேசாம இந்த மார்கேண்டைய கட்ஜு வ நமக்கு மொதல்வர் ஆக்கிட்டா என்ன..

எல்லா விஷயத்துலயும் நம்ம கூடவே உடியாறார்..//

//Karthick Krishna

சிங்கம் பார்ட் 4 வராது..

அதான் அவரே முதல் பாகத்துல டயலாக்ல சொல்லிட்டாரே.. நாலாவதா ஒரு சிங்கம் இருக்கு, அதை பாத்தா உயிரோட இருக்க மாட்டன்னு.. இதுக்கு மேல யாராச்சும் பார்ப்பாங்களா?//

//Sathya Nathan

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கிற்கு செலவான ரூ12.4 கோடியை கேட்டு தமிழக அரசிற்கு கர்நாடகா கடிதம்...

தமிழக அரசில் உள்ள அனைவரையும் அவைத் தலைவர் மதுசூதனன் கட்சியைவிட்டு நீக்கிவிட்டதால் அந்த அமவுண்டை அண்ணனே காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது...//

//Mohamed Muqthar

அம்மா ஜெயிலுக்குப் போனா ஓபிஎஸ்...

சின்னம்மா ஜெயிலுக்குப் போனா இபிஎஸ்...

ராஜா காலிங் ராஜூ... மாமனார காலிங் மாமு...//

//நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

ஹிந்தியை தவிர ஒரு மொழியும் தெரியாத ஒரு ஆள் ..இந்த நாட்டின் பிரதமராக இருக்கலாமாம்..ஆனால் தமிழ் நன்றாகத் தெரிந்த ஒரு ஆள்..தமிழ்நாட்டின் அமைச்சராக வருவதற்கு ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டுமாம் ...

மோடுமுட்டிகளின் மொழி அறிவு இப்படிப்பட்டதுதான்//

//Anbu

நல்லவேள ஜெ. சமாதில 3அடி அடிச்சதால நீ தப்பிச்ச..!

இதுவே MGR சமாதில 3 அடி அடிச்சிருந்தா.!?!

திருப்பி அடிச்சுருப்பார்..!

♦ எத்தன படத்துல பாத்துருக்கோம்//

//Mani Dhanuskodi

ஊடல் கொள்ளாதடி! நான்

ஊழல் பணத்தோடு

ஊருக்கு வருவேன்!

ஊரே கூடியிருக்கு

உன்மேல் உமிழ் நீர் உமிழ

ஓடி ஒளிந்துடுடா ஒப்பற்ற என் கணவா!//

//Karur Kittu

தற்காலிக ஆளுநர், தற்காலிக முதல்வர்(கள்), இப்ப தற்காலிக நீதிபதி.

இது தமிழ்நாடா, தற்காலிக நாடா?//

//Chinna Paiyan

உயிரோட இருக்கும்போது எதிரே வர பயப்புடுவானுக.

இப்போ ஆ ஊ நா சமாதிக்கு வந்துடுறானுங்க.

பயம் விட்டுப் போச்சுடா, விட்டுப் போச்சு

> ஒரு சமாதியின் குமுறல்//

//Amudha Suresh

உலகத்திலேயே மிக வெளிப்படையாய்,

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

மக்களைத் திட்டி,

பொறுப்பில் இருக்கும் ஒருவர்

நடுரோட்டில் ஒருவரை போஸ்டர் கிழித்ததற்காக அடித்து,

காவல்துறை அதை வேடிக்கை பார்த்து,

காவல்துறையின் சீருடையில்

வாகனங்களைக் கொளுத்தி, அடித்து நொறுக்கி,

உறுப்பினர்கள் அனைவரும்

மக்களைப் பற்றிய கவலையில்லாமல்,

தொகுதிப் பணியை கவனிக்காமல் ரெசார்ட்டில் பலநாட்கள் தங்கி,

ஒரு குற்றவாளிக்கு வாழ்க கோஷம் எழுப்பி,

குற்றவாளியின் வழியில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லி,

இயற்கை வளங்களைச் சீரழிக்கும்

அத்தனை திட்டத்திற்கும் ஆதரவு கொடுத்து.........

இப்படி வெளிப்படையாய் நிறைய நடக்கும் தமிழகம், இன்னமும் ஏன் கின்னஸ் வேர்ல்ட் ரெகார்டில் வரவில்லை என்பதே இப்போது பிரதான கவலையாய் இருக்கிறது. வேறு எதற்கும் கவலைப்பட்டு ஆகப்போவதென்ன?//

-லாக் ஆஃப்

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon