மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

மனிதக் குரங்கு கறி சாப்பிட்டவர்கள் கைது!

மனிதக் குரங்கு கறி சாப்பிட்டவர்கள் கைது!

மனிதக் குரங்கு, மான், சிங்கம் போன்றவை அழியும் வன விலங்குகள் பட்டியலில் உள்ளன. எனவே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தோனேசியாவில் மனிதக் குரங்குகள் பாமாயில் விளைநிலங்களில் வசிக்கின்றன. ஜாகர்த்தாவில் பாமாயில் நிலங்களில் சுற்றித் திரிந்த ஒரு மனிதக் குரங்கைப் பிடித்த 3 பேர் அவற்றை கொன்று இறைச்சியாக வெட்டியுள்ளார்கள். பின்னர் அதன் கறியை சமைத்துச் சாப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் பாமாயில் மர விவசாயப் பண்ணையில் பணிபுரியும் ஊழியர்கள். இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் போலீசார் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள். கொன்று சமைக்கப்பட்ட மனிதக் குரங்கின் எலும்புகள் மற்றும் காயவைக்கப்பட்ட இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அழியும் வனவிலங்குகள் பட்டியலில் மனிதக் குரங்கு இருப்பதால் அவற்றை கொல்வது சட்ட விரோதமாகக் கருதப்படுகிறது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon