மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

முதல்வரை எதிர்த்து இரும்புப் பெண் வேட்பு மனு தாக்கல்!

முதல்வரை எதிர்த்து இரும்புப் பெண் வேட்பு மனு தாக்கல்!

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி 16 ஆண்டுகள் தொடர் உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலரான இரோம் சர்மிளா, மணிப்பூர் முதல்வரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் வரும் மார்ச் 4 மற்றும் 8ஆம் தேதி என்று இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில், மக்கள் பிரச்னைகளுக்காக கடந்த 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா, அதன்மூலமாக நாடெங்கிலும் பிரபலமடைந்தார். அதையடுத்து, அவர் மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்டார். போராட்டத்தை முடித்துக்கொண்ட பின்பு அவர் அரசியலில் களமிறங்கினார். மக்கள் மறுமலர்ச்சி மற்றும் நீதி கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள இரோம் சர்மிளா, முதல்வர் போட்டியிடும் தவ்பால் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்கியுள்ளார். தொகுதி முழுவதும் 20 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பொதுமக்களைச் சந்தித்தபின் அவர், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon