மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கடிதம்!

பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி கடிதம்!

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பழனிச்சாமியை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். தனக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிச்சாமி இன்று நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: முதல்வராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்த தங்களுக்கு இக்கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon