மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

யாருக்கு வாக்கு? நட்ராஜ் எம்.எல்.ஏ!

யாருக்கு வாக்கு? நட்ராஜ் எம்.எல்.ஏ!

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று மாலை பதவியேற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி நாளையே சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.

இந்நிலையில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ., நடராஜ் கூறியதாவது: தற்போது அமைந்துள்ளது மக்களின் நம்பிக்கை பெறாத அரசு. அதனால், நாளை நடக்கவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் மக்களின் நம்பிக்கைக்கேற்பவும், எனது மனசாட்சிப்படியும் வாக்களிப்பேன் என்று அவர் கூறியுள்ளார். பெரும்பான்மையினர் ஆதரிப்பதால் பழனிச்சாமிக்கே எனது ஆதரவு என்று, நடராஜ் எம்.எல்.ஏ., ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon