மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

அசரவைக்கும் தொழில்நுட்பம்: 7D!

புதுமையான தொழில்நுட்ப வளர்ச்சிகள் தினமும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களைக் கண்டு நாம் வியந்ததற்கு காரணம் அதன் கிராஃபிக் தொழில்நுட்பம் தான். அந்த தொழில்நுட்பம் கொண்டு வேறு உலகத்துக்கு நம்மைப் பல இயக்குநர்களும் அழைத்து சென்றுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. உதாரணமாக ஜுராசிக் பார்க், அவதார், லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், என பல்வேறு திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் . இவை அனைத்தும் நாம் நேரில் காண முடியாத ஒரு உலகினை நம் கண்முன்னே கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்தியவை என்பதே உண்மை.

எனவே நாம் காண விரும்பும் சில அதிசயமான காட்சிகளை தொழில்நுட்பத்தை கொண்டு நேரில் காண உதவியாக ஜப்பான் புதிய 7D தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்றில் ஜப்பானில் புதிதாக அமைத்துள்ள 7D தொழில்நுட்ப பூங்கா பற்றிய தகவலை வெளியிட்டனர். காண்போரை வியப்பில் ஆழ்த்தும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த தொழில்நுட்பம் பற்றி கண்டு ரசிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

7D amazing

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon