மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 17 பிப் 2017

மன அழுத்தத்தால் வரும் வயிற்றுப் பிரச்னை !

மன அழுத்தத்தால் வரும் வயிற்றுப் பிரச்னை !

முதுகைப் பிடிக்கும் வலி இருக்கும். முதுகு கட்டைபோல உணர்வில்லாமல் இருக்கிறது என்பார்கள். முதுகை அழுத்திப் பிடித்தால் ஏப்பம் வரும். 'எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்துட்டேன். ஆனாலும் நெஞ்சு எரிச்சலும், வாயுப்பிடிப்பும் இருக்கு என்பார்கள்'. இது, கேஸ்ட்ரோ ஈசோபைகல் ரிபிளஸ் டிஸிஸ் (Gastroesophageal reflux disease) பிரச்னை. உமிழ்நீரானது அதிகளவு சுரந்து மேலேறிவிடும். மேலேறும் அமிலமானது உணவுக்குழாயின் அடிப்பகுதியை புண்ணாக்கிவிடும். நெஞ்சு அடைப்பதுபோல இருக்கும். இந்தப் பிரச்னையால் உணவுக்குழாயும், உணவுப்பையும் சேரும் இடத்தில் ஸ்பின்டர் தசையானது தளர்வடையச் செய்துவிடும். இந்த தசையானது தளர்வடைந்தால் உமிழ்நீர் எளிதாக மேலேறி நெஞ்சுப் பகுதியில் அடைப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். நெஞ்சுப் பகுதியில் அடைப்பதால் இதை இதய நோய் என நினைத்துக்கொண்டு இதய நோய் நிபுணரைப் பார்ப்பார்கள். அங்கே பரிசோதனைகள் செய்தால் எல்லாம் சரியாக இருக்கும். சிலர் இதை முதுகுவலி என நினைத்துக்கொண்டு அதற்கான சிகிச்சையை செய்வார்கள்.

மன அழுத்தம் அதிகமுள்ள வேலை முறை, சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, காரமான, கொழுப்பான உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, பொரித்த உணவுகள், சீஸ் அதிகமுள்ள ஜங்க் உணவுகள் சாப்பிடுவது, போதிய உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் இருப்பது, மது, புகைப்பழக்கம், கோலா வகை பானங்கள் அதிகம் அருந்துவது ஆகியவற்றால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

இந்தப் பிரச்னை உள்ளவர்கள் கொழுப்புள்ள, காரமான உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். வாயு அதிகமுள்ள கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது. நார்ச்சத்து அதிகமுள்ள பழங்கள், காய்கறிகள், அவித்த மீன் ஆகிய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளை தினமும் 15 நிமிடம் செய்துவர வேண்டும். இதனால் ஸ்பின்டர் தசை வலுவாகும். தளர்வடையும் வாய்ப்பும் குறையும். யோகா பயிற்சிகளை செய்துவருவதன்மூலம் மன அழுத்தம் வராமல் தவிர்க்க முடியும். காலையில் எழுந்தவுடன் நடைப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சியை முக்கால் மணி நேரமாவது மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு சரியானவர்கள் இடதுபுறம் சாய்ந்து படுத்துறங்குவது நல்லது.

வெள்ளி, 17 பிப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon