மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

விரைவில் மோசமான சூழ்நிலை: மன்மோகன் சிங்

விரைவில் மோசமான சூழ்நிலை: மன்மோகன் சிங்

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் மோசமான சூழ்நிலை வரவுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மன்மோகன் சிங் இதுகுறித்து பேசியதாவது:

இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றப்போவதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால், ஒரு முடிவின் துவக்கம் ஆரம்பாகியுள்ளதை நாம் அறிவோம். இனிமேல், மோசமான சூழ்நிலை வர உள்ளது. நாட்டின் வருமானம் கடந்த இரண்டாண்டுகளில் அதிகரிதது வருவதாக பிரதமர் மோடி கூறுவது முழுக்க பொய். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த சில மாதங்களாக, அனைத்தும் கெட்டதிலிருந்து மோசமாக மாறியுள்ளது. ஜி.டி.பி., வளர்ச்சி 6.3 சதவீதமாக குறையும் என சிலர் கூறுகின்றனர்.

இதன் மூலம் ரூபாய் நோட்டு வாபஸ் பெரிய பேரழிவு என்பதை நாம் எண்ணி பார்க்கலாம். ஜி.டி.பி. குறையும் போது, வேலைவாய்ப்பு, உற்பத்தி, விவசாய வருமானம் குறையும். இது ரூபாய் நோட்டு வாபசால் ஏற்பட்ட பேரழிவு ஆகும் எனக்கூறினார்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon