மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

விஜயசாந்தியாக மாறும் திரிஷா

விஜயசாந்தியாக மாறும் திரிஷா

தமிழ் சினிமாவில் லேசா லேசா என பாடி அனைவரின் மனதையும் துள்ளலாக மாற்றியவர் திரிஷா. கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ள கொடி படம் திரிஷாவிற்கு புதிய பரிணாமத்தினை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்து வரும் திரைப்படம் “கர்ஜனை”. இந்த படம் பற்றி நேற்று வந்த செய்தியில் இந்தியில் அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்த NH1௦ என்ற திரைப்படத்தின் ரீமேக் என பல தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இது குறித்து படத்தின் இயக்குநர் சுந்தர் கூறுகையில் இது ரீமேக் படம் கிடையாது. முழுக்க முழுக்க புதிய திரைக்கதையில் உருவாகும் திரைப்படம் என அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இந்த திரைப்படம் வட இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்படுகிறது. ஒருதலையாக விரும்பும் ஒரு இளைஞனின் காதலை மறுப்பதால் ஒரு பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்கிறான் ஒரு இளைஞன். அந்தப் பெண்ணை தவறாக வீடியோ எடுத்து அதனை விற்று பணமாக்குகிறான். இதனால் பல சிக்கல்களை சந்திக்கிறாள் அந்த பெண்.

இந்த திரைப்படத்தில் திரிஷா ஒரு வெஸ்டர்ன் டேன்சர் ஆக உள்ளார். இந்த படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக திரிஷா தற்போது சிறப்பு பயிற்சி எடுத்துவருகிறார் என தகவல் ஒன்றினையும் வெளியிட்டார் இயக்குநர். பெண் நடிகர்கள் ஒரு சிலரே இது போன்று சண்டை காட்சிகளில் உண்மையாக நடித்துள்ளனர் . உதாரணமாக நடிகை விஜயசாந்தி, பிர்லா திரைப்படத்தில் நயன்தாரா போன்றவர்களை குறிப்பிடலாம். கோலிசோடா மற்றும் 1௦ என்றதுக்குள்ள படத்தின் சண்டைப் பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் இந்தப் படத்தில் பணியாற்றுகிறார்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon