மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஏற்றுமதிக்கு உதவும் வலைதளம் அறிமுகம்!

ஏற்றுமதிக்கு உதவும் வலைதளம் அறிமுகம்!

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு உதவிகரமாக எக்சிம் பேங்க் புதிய வலைதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

எக்சிம் வங்கி ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு ஆலோசனை, கடனுதவி உள்ளிட்ட நிதிச் சேவைகளை வழங்கி வருகிறது. இவ்வங்கி, சிறிய, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய ‘எக்சிம் மித்ரா’ - EXIM Mitra என்ற வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வலைதளத்தில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான அனைத்து விபரங்களையும் வர்த்தகர்கள் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது.

சர்வதேச சந்தைகளில், எந்தெந்த பொருட்களுக்கு தேவை அதிகமுள்ளது என்பதையும், அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு ஆகும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்கள் குறித்த தகவல்களையும், இந்த வலைதளம் வழங்குகிறது. மேலும், ஏற்றுமதி செய்ய விரும்புவோருக்கு கிடைக்கும் பல்வேறு கடன் வசதிகள், காப்பீட்டு திட்டங்கள், ஏஜெண்ட்களின் முகவரிகள் உள்ளிட்ட தகவல்களையும் இந்த வலைதளத்தில் காணலாம். அதுபோல, இறக்குமதியாளர்களுக்கு தேவையான அனைத்து விபரங்களும் இதில் உள்ளன.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon