மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

தங்க நகை : ஹால்மார்க் நடைமுறையில் மாற்றம்!

தங்க நகை : ஹால்மார்க் நடைமுறையில் மாற்றம்!

தங்க நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரையிடுதலில் மாற்றம் செய்து புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

பி.ஐ.எஸ். எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தங்க நகைகளின் தரத்தை குறிப்பிடும் 'ஹால்மார்க்' முத்திரை தொடர்பான புதிய நடைமுறை ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தங்க நகைகளின் தரம் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கு தரக் குறியீடுகள் வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்க நகைகளின் தரத்தை சுலபமாக அறிந்துகொள்ள வசதியாக, முதல் தரத்திற்கு 916 என்ற வழக்கமான குறியீட்டுடன், தற்போது 22 காரட் என குறிக்கப்படுகிறது.

அதேபோல, 750 என்ற தரக் குறியீட்டுடன், 18 காரட் என்றும், 585 என்ற தரக் குறியீட்டுடன், 14 காரட் எனவும், தங்க நகைகளில் குறிக்கப்படும். எனவே, ஒரு 'ஹால்மார்க்' தங்க நகையில், பி.ஐ.எஸ். முத்திரை, தர முத்திரை, சான்றளிப்பு மையத்தின் முத்திரை மற்றும் விற்பனையாளரின் அடையாளம் என, நான்கு குறியீடுகள் இடம் பெற்றிருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon