மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

கடத்தப்பட்ட 6000 ஆமைகள் பறிமுதல்!

இந்தியா முழுவதும் அழிந்து வரும் அரியவகை உயிரினங்களை காப்பாற்றுவதற்காக அரசு பல்வேறு முயற்சிகளையும்நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனால், இந்த அரிய வகை உயிரினங்களை சில கும்பல் சட்டவிரோதமாகக் கடத்தி விற்பனைசெய்து வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 6,000 ஆமைகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம், அமேதி மாவட்டம் கெளரிகஞ்ச் நகரில் உள்ள ஒருவரின் வீட்டில் ஆமைகள் பதுக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குதகவல் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, போலீஸார் அந்த வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். சோதனையில், 6000ஆமைகள் சாக்குகளில் கட்டிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், அந்த ஆமைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பீகார், உத்தரப்பிரதேசம்,சீனா, வங்காள தேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. அவர்களைபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கடல் ஆமைகள் மருந்துகளுக்காகவும், உணவுக்காகவும் அதிகளவில் கடத்தப்படுகிறது. இந்திய அரசால்பாதுகாக்கப்பட்ட பதினாறு வகையிலான கடல்வாழ் உயிரினங்களில் ஆமைகளும் கடல்குதிரைகளும் முக்கியமானவை என்பதுகுறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon