மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

சர்வதேச திரைப்பட விழா : தவறவிடக்கூடாத திரைப்படங்கள்

சர்வதேச திரைப்பட விழா : தவறவிடக்கூடாத திரைப்படங்கள்

14 வது சென்னை திரைப்பட விழாவின் இறுதி நாளான நாளை திரையிடப்படும் படங்களில் முக்கியமானவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிறைவு விழா மாலை நடைபெறுவதால் 4.40 மற்றும் இரவு 7 மணி காட்சிகள் கிடையாது.

பெலாஸோ | லூப் | மதியம் 2.30 மணி | Loop |Hurok | Dir.: Isti Madarász | Hungary |2016 |95

ஆடம், கர்ப்பமாகியிருக்கும் தனது காதலியை, ஒரு விபத்தில் இழக்கிறான். ஆனால் அவளது மரணத்துக்கு காரணமான சம்பவங்களை சரி செய்ய, ஆடமுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் இந்த வாய்ப்பு அவ்வளவு எளிமையானதல்ல. ஆடம் இதற்கு முன் எடுத்த முடிவுகளின் பின் விளைவுகளை கையாண்டு, தனது காதலியின் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.

ஆர்.கே.வி ஸ்டுடியோ | போஸ்ட் டெனப்ரஸ் லக்ஸ் | மதியம் 12.00மணி| Post Tenebras Lux |Felhők Felett | Dir.: Carlos Reygadas | USA |2012 |120′

மெக்ஸிகோவின் நகரத்தில் வாழ்ந்த குடும்பமானது கிராமத்திற்கு செல்கிறது. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களே கதைக்களம். 2012 ல் வெளியான இந்த திரைப்படம் கான்ஸ் திரைவிழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்றுள்ளது.

ஆர்.கே.வி ஸ்டுடியோ | த பீபுள் விஸ் ஃப்ரிட்ஸ் பௌர் | மதியம் 2.30 மணி | The people vs. FrizBauer | Der Staat Gegen fritz Bauer | Dir.: Lars Kraume | Germany|2015|105′

நாஜிக்களின் காலத்தில் அட்டர்னி ஜெனரலாக இருக்கும் வழக்கறிஞரைப் பற்றிய கதை. வரலாற்று பின்புலத்தில் நடைபெறும் கதைக்களம். ஜெர்மனியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படம்.

கேஸினோ | அஸ் ஐ ஒப்பன் மை ஐய்ஸ் | மதியம் 12.00 மணி | As I Open My Eyes |A Peine J’ouvre Les Yeux | Dir.: Leyla Bouzid | Tunisia |2015 |102

துனிசியாவின் கோடை காலம் 2010. புரட்சிக்கு சில மாதங்கள் முன்பு, 18 வயதான ஃபாரா படித்து முடிக்கிறாள். அவள் குடும்பத்தினர் அவளை மருத்துவராக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் அவளுக்கோ தனது இசைக்குழுவின் மீது ஈடுபாடு. அதில் ஒருவனுடன் காதல். வாழ்க்கையை கொண்டாடுவது, குடிப்பது, இரவில் நகரத்தை சுற்றுவது என வாழ்ந்து வருகிறாள் ஃபாரா. அவளது தாய் ஹயத்துக்கு துனிசியாவும், அதில் நிறைந்துள்ள ஆபத்துகளும் தெரியும். அடக்குமுறை நிறைந்த தன் சமூகத்தையும், குடும்பத்தையும் ஃபாரா எப்படி எதிர்த்தாள்?

கேஸினோ | சம்மர்டைம் | பிற்பகல் 2.30 மணி | Summertime |La Belle Saison | Dir.: Catherine Corsini | France |2015 |100′

பிரான்ஸின் கிராமப்புறத்தில் இருந்து பாரிஸுக்கு வரும் டெல்பின் அங்கே பெண்ணியவாதிகளின் உதவியுடன் வாழ்கிறாள். ஒரினசேர்க்கையாளராக இன்னொரு பெண்ணுடன் வாழும் நிலையில் திடீரென அவளது அப்பா இறந்துவிட கிராமத்திற்கு செல்கிறாள். அதன்பின் அவளது காதல் என்னவானது என்பதே கதை.

ஐனாக்ஸ் 3 | ஓட் டு மை ஃபாதர் | காலை 10.00 மணி | Ode To My Father|Gukjesijang | Dir.: Yoon Je-kyoon | S.Korea |2014 |126′

1950களில் கொரியப்போரின் நடுவில் சிறுவன் ஒருவன் தனடு குடும்பத்தை பார்க்க முயல்வதே கதை.

ஐனாக்ஸ் 3 | த சீல் ஆஃப் த சன் | மதியம் 12.00 மணி | The Seal Of The Sun |Taiyô No Futa | Dir.: Futoshi Sato | Japan |2016 |130′

மார்ச் 11, 2011 அன்று ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட வெடிப்பையும் அதன் பின் நிகழும் சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்ட படம்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon