மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஜல்லிக்கட்டு விளையாடும் விஜய் சேதுபதி

ஜல்லிக்கட்டு விளையாடும் விஜய் சேதுபதி

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் திருவிழாவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் இந்த வருடம் ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் உறுதியுடன் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கமல்ஹாசன், சூர்யா, சிவகார்த்திகேயன், ஹிப்ஹாப் தமிழா, சிம்பு, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய்சேதுபதி ஒரு படத்தில் மாடுபிடிக்கும் வீரராக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் 'ரேணிகுண்டா' இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி புக் செய்யப்பட்டார். 'கருப்பன்' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தில்தான் விஜய்சேதுபதி ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கவுள்ளார். ஜல்லிக்கட்டு குறித்த போராட்டம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்சேதுபதி குறித்த இந்த தகவல் தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon