மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

2000 ரூபாய் நோட்டு வடிவில் புடவைகள்!

2000 ரூபாய் நோட்டு வடிவில் புடவைகள்!

குஜராத்தில் 2000 ரூபாய் நோட்டின் டிசைனில் வடிவமைக்கப்பட்ட புடவைகள் அதிகளவில் விற்பனையாகி வருவது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம 8 ஆம் தேதி, பழய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மொடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. இந்த புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சாயம் போவதாகவும், ரூபாயைப் போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால், இளம் வயது பெண்களோ 2000 ரூபாய் நோட்டின் வண்ணம் தங்களுக்கு பிடித்த நிறத்தில் உள்ளதாகவும், அழகாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் குஜராத் சூரத் நிறுவனம் ஒன்று 2000 ரூபாய் நோட்டுக்கள் டிசைனில் புடவையை வடிவமைத்துள்ளது. சுமார் 6 மீட்டர் புடவையில் 504 ரூபாய் நோட்டுக்களின் டிசைன்கள் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புடவை இப்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை வெறும் 160 ரூபாய் மட்டுமே என்பதால், பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

புதிய வகையில் புடவையை வடிவமைக்கவேண்டும் என எண்ணி 2000 ரூபாய் நோட்டுகள் டிசைனில் வடிவமைத்ததாக வர்த்தகர் ஷிவ் ஷைனி தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப், உத்திரபிரதேசம் மற்றும் கோவாவில் இந்த புடவைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இப்போது இந்த புடவை ஒரு புது ட்ரெண்ட் ஆகியுள்ளது. விற்பனையும் அமோகமாக உள்ளது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம், பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குஜராத் சூரத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் ரூபாய் நோட்டுகளை ஆடையாக அணிந்து மாணவிகள் ஒய்யாரமாக நடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon