மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

தோல்வியில் மனம் கவர்ந்த தோனி

தோல்வியில் மனம் கவர்ந்த தோனி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகள் வரும் 15 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன் முதல் பயிற்சி ஆட்டம் நேற்று நடைபெற்றது . டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்தெடுத்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ராயுடு 100 ரன்கள் அடித்து ரிட்டையர் கட் முறையில் வெளியேறினார். தவான் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் யுவராஜ் , அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர் , டி2௦ மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடி அசத்திய இந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களின் உற்சாகத்தினை அதிகரித்தது. யுவராஜ் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், கேப்டனாக தனது இறுதி போட்டியை விளையாடும் தோனி 40 பந்துகளில் 68 ரன்களை அடித்து அசத்தினார் (8பவுண்டரிகள், 2 சிக்சர்கள்). பின்னர் 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 48.2 ஓவர்களில் 3௦7 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்டத்தில் தோனி களமிறங்கும் போது அரங்கமே “தோனி தோனி” என ஆரவாரத்தில் இருந்தது.

அதற்கும் மேலாக யுவராஜ் சிங் தோனியுடன் சேர்ந்து ஒரு வீடியோ பதிவினை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், அதில் யுவராஜ் கூறுகையில் “தோனி ஒரு சிறந்த கேப்டன் , உங்கள் தலைமையில் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, இவர் தலைமையில் 3 பெரும் உலகக்கோப்பைகளை வென்றுள்ளோம், மேலும் தற்போது சிறந்த டெஸ்ட் அணியாக இந்தியா உள்ளது”.

வீடியோவில் தோனி பேசும் போது “தேங்க்ஸ் டு யு , உனது சிறந்த 6 சிக்ஸர்களுக்கு” என புன்னகைத்தார். யுவராஜ் அதற்கு நன்றி என்று கூறி பின்னர் தோனியிடம், “இப்போது நீங்கள் கேப்டன் இல்லை. இனி நீங்கள் சிக்சர்கள் அடிப்பீர்களா?” என கேட்க அதற்கு பதில் கூறிய தோனி “எனக்கு சரியான இடத்தில் பவுலர்கள் போட்டால், தேவையான தருணத்தில் நான் அடிப்பேன்” என கூறும்பொழுது வீடியோ முடிவடைகிறது. இந்த வீடியோவினை நன்கு கவனித்தால் அதன் பின்னர் அரங்கமே தோனி பெயரை கூச்சலிடுவது நன்கு கேட்கும். நேற்று நடைபற்ற ஆட்டம் வெற்றியா தோல்வியா என எவரும் கண்டு கொள்ளவில்லை, அனைவரின் கவனமும் தோனி மீதே இருந்தது என்றே கூறலாம்.

யுவராஜ் பதிவிட்ட வீடியோ

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon