மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 அக் 2017

மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள் - ஹெல்த் ஹேமா

மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள் - ஹெல்த் ஹேமா

என்னதான் நாம் உடல்நலம் நன்றாக இருக்க ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலும், மனநலம் நன்றாக இருந்தால்தான் சுறுசுறுப்புடன் சந்தோஷமாகச் செயல்பட முடியும். இதில் ஐ.டி நிறுவனத்தினர்தான் அதிக மன உளைச்சலுக்குள்ளாகின்றனர் என்பதெல்லாம் இல்லை. இல்லத்தரசிகளுக்கும், அன்றாட வருமானத்துக்காகப் போராடி பல அவமானங்களை, காழ்புணர்ச்சிகளைத் தாண்டி போராடிக் கொண்டிருப்பவர்களுக்கும்கூட மன அழுத்தங்கள் உண்டு. நமக்கே தெரியாமல் எவ்வளவோ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவற்றை உட்கொள்ளுவதைப்போல, உணவு வகைகளிலேயே மன அழுத்தத்தைக் குறைப்பவையும் இருக்கின்றன.

அப்படியான மன அழுத்தத்தைக் குறைக்கும் உணவுகள் இதோ...

மாதுளம்பழச் சாற்றை தினசரி அருந்தலாம். இதில் உள்ள நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்கும். (வெள்ளைச் சர்க்கரை ஐஸ் கட்டிகள் சேர்ப்பதைத் தவிர்க்கவும்).

மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இச்சத்துக் குறைவினால் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன.

வாழைப்பழம் மன அழுத்தத்துக்கு நல்லது.

உறங்குவதற்கு முன் அரை டீஸ்பூன் அமுக்கிரா கிழங்கு பொடியை ஒரு டம்ளர் பாலில் சேர்த்து அருந்த நிம்மதியான தூக்கம் வரும்.

அதேபோல், ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த்தூளைப் பாலில் சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

மன அழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது.

எண்ணெயில் பொரித்த உணவுகள், தந்தூரி உணவுகளைத் தவிர்ப்பது மன அழுத்த நோயாளிகளுக்கு நல்லது.

நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்தல் நல்லது.

ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை.

மன அழுத்தத்தைத் தவிர்ப்போம். மன மகிழ்வுடன் வாழ்வோம்.

ஹெல்த் ஹேமா 01

ஹெல்த் ஹேமா 02

ஹெல்த் ஹேமா 03

ஹெல்த் ஹேமா 04

ஹெல்த் ஹேமா 05

ஹெல்த் ஹேமா 06

ஹெல்த் ஹேமா 07

ஹெல்த் ஹேமா 08

புதன், 11 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon