மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 அக் 2017

வாழைப்பூ உருண்டைக் குழம்பு ரெடி - கிச்சன் கீர்த்தனா

வாழைப்பூ உருண்டைக் குழம்பு ரெடி - கிச்சன் கீர்த்தனா

“ரெண்டு பேர் பேசணும். ஒரு நாள் விடாம பேசணும். ஆனா ஃப்ரீயா பேசணும்.”

“அதுக்கு நீ நேர்ல போயிதான் பேசணும்”என்பது போல...

“நிறைய சத்துகள் உள்ள வாழைப்பூவைச் சமைக்கணும், சாம்பார் போலவும் வைக்கணும், கொழம்பு மாதிரியும் தொட்டுக்கணும், காய்கள் போட்டது போலவும் இருக்கணும், காரசாரமா இருக்கணும், ஆனா... சிம்பிளா சமைக்கணும். என்ன செய்யலாம் கீர்த்தி” என தோழி ஒருத்தி கேட்டாள்.

“அதுக்கு நீ வாழைப்பூ உருண்டைக் குழம்புதான் வைக்கணும்” என்று கூறினேன்.

எப்படி... இப்படி..

தேவையானவை:

வாழைப்பூ - 1

துவரம்பருப்பு - 100 கிராம்

கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

கடுகு வெந்தயம் – தாளிக்க (தேவைக்கேற்ப)

சாம்பார்தூள் - 2 ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

எண்ணெய் தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும். அதனுடன் வாழைப்பூ, உப்பு சேர்த்து உருண்டைகளாகப் பிசைந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சாம்பார்தூள் சிறிது சேர்த்து கொதிக்க வைத்து அதில் வேகவைத்த உருண்டைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

சுவையான வாழைப்பூ உருண்டைக் குழம்பு ரெடி

கீர்த்தனாவுக்கு வந்த காதல் கடிதம்

அன்பே நீ ஒரு தோசை உன் மேல எனக்கு ஆசை.

அன்பே நீ ஒரு அப்பம் உன்னை பார்த்தால் வருது ஏப்பம்.

அன்பே நீ ஒரு கெட்டிசட்னி என்னை போடாத பட்டினி.

அன்பே நீ ஒரு பரோட்டா உன்னை பொண்ணு கேட்டு வரட்டா.

அன்பே நீ ஒரு ஊத்தப்பம் நாம் ஒன்னா வாழ்ந்து பார்ப்போம்.

அன்பே நீ ஒரு கையேந்தி பவன் உனக்காக கையேந்துறான் இவன்.

அன்பே நீ ஒரு பூரி இதைப் படித்துவிட்டு துப்பாதே காறி.

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

கிச்சன் கீர்த்தனா 06

கிச்சன் கீர்த்தனா 07

கிச்சன் கீர்த்தனா 08

புதன், 11 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon