மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 4 அக் 2017

வெங்காயத்தின் மருத்துவ பயன் - ஹெல்த் ஹேமா : 04

வெங்காயத்தின் மருத்துவ பயன் -  ஹெல்த் ஹேமா : 04

தினசரி சமையலில் கண்டிப்பாக இடம்பெறுவது வெங்காயம். கோடைக்காலம் மழைக்காலம் என்று எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடியது. வெங்காயம் பயன்படுத்தும்போது கண்களில் எரிச்சல் ஏற்படாமல் இருப்பதற்கு டிப்ஸ்களும், வெங்காயத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய ஸ்பெஷலான பதார்த்தங்களைப் பற்றியுமே நாம் பார்த்திருக்கிறோம். நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் வெங்காயம் பலவித நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது என்றுதான் பலருக்கும் தெரியும். அதை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினால் என்னன்ன பலன்கள் கிடைக்குமென்பதை பார்க்கலாம்.

* 100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் - 86.6 சதவீதம்

* புரதம் - 1.2 சதவீதம்

* கொழுப்புச்சத்து - 0.1 சதவீதம்

* நார்ச்சத்து - 0.6 சதவீதம்

* தாதுச்சத்து - 0.4 சதவீதம்

* மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) - 11.7 சதவீதம் அடங்கியுள்ளது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்.

* வெங்காயச்சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடித்தால் இருமல் குறையும்.

* வெங்காயத்தைப் பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேறும்.

* வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

* இரத்தச்சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் வெங்காயத்தை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.

* வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாதநோய் குணமடையும்.

* வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. மேலும் உணவு செரிமானமாவதற்கும் உதவுகிறது.

* சிலருக்கு வெயில் காலத்தில் உடம்பில் கட்டிகள் தோன்றும், இதற்கு வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் விரைவில் கட்டிகள் குணமாகும்.

* வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

* வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டாலும், உடனடியாக நீர்க்கடுப்பு சரியாகும்.

* மாரடைப்பு நோயாளிகள் மற்றும் இரத்தநாளக் கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

ஹெல்த் ஹேமா 01

ஹெல்த் ஹேமா 02

ஹெல்த் ஹேமா 03

புதன், 4 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon