மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

முருங்கைக்கீரை: ஹெல்த் ஹேமா 03

முருங்கைக்கீரை: ஹெல்த் ஹேமா 03

மகத்தான முருங்கைக்கீரையின் மருத்துவப் பயன்கள்!

முருங்கைக்காய் என்றாலே பாக்யராஜ்தான் என்று மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஆனால், முருங்கைக்கீரை பற்றிய சமையல்கள் மட்டும், நிறையவே நம் கண்களில் படுகிறதே தவிர, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அவ்வளவாக அறிவதில்லை.

இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து போன்ற ஆரோக்கியமான சத்துகள் நிறைந்துள்ள முருங்கைக்கீரையை எந்தெந்த வழிகளில் சாப்பிட்டு வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்.

* பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

* முருங்கைக்காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. வாரத்தில் இரண்டு முறை முருங்கைக் காயை உணவாக சாப்பிட்டால், ரத்தம் மற்றும் சிறுநீர் சுத்தம் அடைகிறது. முருங்கைக்காயைச் சூப் வைத்து குடித்துவந்தால் காய்ச்சல், மூட்டுவலி குணமாகும்.

* கர்ப்பப்பையின் குறைகளைப் போக்கி, கருத்தரிக்கும் திறனை ஊக்குவித்து, பிரசவத்தைத் துரிதப்படுத்த உதவுகிறது. முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.

* முருங்கைக்கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கைக்காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

* முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்.

* முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்.

* ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கைக்கீரையைச் சூப் செய்து குடிக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்ற, முருங்கை இலையை வேகவைத்து சமைத்து சாப்பிட வேண்டும்.

ஹெல்த் ஹேமா 01

ஹெல்த் ஹேமா 02

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon