மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 2 அக் 2017

தண்ணீர் குடிச்சிட்டுப் படிங்க: ஹெல்த் ஹேமா 02

தண்ணீர் குடிச்சிட்டுப் படிங்க: ஹெல்த் ஹேமா 02

உடலின் எடையில் 50 முதல் 75 சதவிகிதம் நீரால் நிரம்பியுள்ளது. நீரின் அத்தியாவசியம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால், முறையாகப் பயன்படுத்துகிறோமா என்பது சந்தேகம்தான். முக்கியமாகக் குளிரூட்டப்பட்ட அறைகளில் 8 - 10 மணி நேரங்களாகப் பணிபுரியும் அனைவரும் கட்டாயமாக அதிகளவில் தண்ணீர் பருகியே ஆக வேண்டும். வெளியில் சென்றால் இயற்கை காற்று, வெயில் சகிதம் இருக்க நமக்கு தாகம், வியர்வை ஏற்படும். போதுமான அளவாவது நீர் அருந்துவோம். ஆனால், அலுவலகத்தில் பணிபுரியும்போது தேநீர் இடைவேளையின்போதோ அல்லது உணவு இடைவெளியின்போதோ மட்டுமே நீர் அருந்துகிறோம்.

நாள் ஒன்றுக்கு 2 - 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. 8 - 10 கிளாஸ் அளவு என்று எளிதாகப் புரியவைக்கின்றனர். ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? இல்லாவிட்டால், என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்பதைப் பார்ப்போம்.

* தண்ணீர் உடலின் சக்திக்கான முக்கிய பொருள். தண்ணீர் பற்றாமை என்னஸம் செயல்பாட்டினை உடலில் குறைத்துவிடும். இதனால் சோர்வு அதிகமாக ஏற்படும்.

* உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது சுவாச காற்று மாற்றம் குறைபடும். காரணம், இருக்கும் நீர்சத்தினை உடலில் தக்கவைக்க உடல் எடுக்கும் முயற்சி இது. இதனால், ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படக்கூடும்.

* நீர் சத்து உடலில் குறையும்போது இருக்கும் நீர் சத்தினை தக்கவைக்க அதிக கொழுப்பு சத்தினை உருவாக்கும்.

* உடலில் நீர் சத்து குறையும்போது அதிக நச்சுப் பொருள்கள், ஆசிட் கழிவுகள் தேங்குவதால் கிருமிகள் தாக்குதல் சிறுநீரகம், சிறுநீரகப்பையில் ஏற்படும். கூடவே வீக்கம், வலி ஏற்படும்.

* குடல் உடலில் நீர் சத்தினை அதிகம் இழுக்கக் கூடியது. நீர் சத்து குறையும்போது கழிவுகள் காலதாமதாகப் பெருங்குடலுக்குச் செல்லும் அல்லது செல்லாது தேங்கி, கடினப்பட்டு இருக்கும். இதனால் மலச்சிக்கல் ஏற்படும்.

* மூட்டுகளுக்கு அதிக நீர்சத்து தேவை. நீர்சத்து குறையும்போது மூட்டுகள் பலவீனப்படும். மூட்டு கடினப்படுதல், மூட்டுவலி ஆகியவை ஏற்படும்.

* நீர்சத்து குறையும்போது செல்களுக்கு நீர் இல்லாததால் தாகம் எடுக்கும்போத் அவர்கள் அதை உணராமல் அதிகம் உண்கின்றனர். இதனால் எடை கூடும்.

* தொடர்ந்து உடலில் நீர் குறைபாடு இருக்கும்போது அனைத்து உறுப்புகளும், சருமம் உட்பட சுருங்கத் தொடங்குகின்றன. அதனால் இளவயதிலேயே முதுமை தோற்றம் பெறுவர்.

* ரத்தம் 92 சதவிகிதம் நீர் கொண்டது. நீர் குறையும்போது ரத்தம் கடினப்படுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

* சருமம் உடலின் நச்சுப் பொருள்களையும், கழிவுகளையும் கூட வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. நீர் சத்து உடலில் குறையும் பொழுது சருமம் பல வகையான சருமப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* நீர் குறைபாடு வயிற்றுப் புண், அசிடிடி ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

* மனித உடலில் 75 சதவிகிதம் நீர்தான். 8 - 10 கிளாஸ் நீரைத் தினம் அருந்துங்கள் என்று சொன்னாலும் உடற்பயிற்சி, தட்ப வெப்பநிலை. கர்ப்பக்காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம், நோய்வாய்பட்ட காலம் இவற்றில் கூடுதல் நீர் தேவைப்படும்.

காலையில் எழுந்த உடன் மற்றும் இரவு படுக்கும்முன் தண்ணீர் அருந்துதலை வழக்கமாகக்கொண்டு முதல் முயற்சியை எடுத்துத் தொடங்கிடுவோம்.

ஹெல்த் ஹேமா 01

திங்கள், 2 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon