காங்கிரஸும் எதிர்ப்பு!

வெள்ளி, 17 பிப் 2017

நாளை நடைபெறவுள்ள பெரும்பான்மை வாக்கெடுப்பில், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் ராமசாமி, விஜயதாரணி, வசந்தகுமார், பிரின்ஸ், ராஜேஸ்குமார், கணேஷ் ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். தாராபுரம் காளிமுத்து, முதுகளத்தூர் பாண்டி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.