தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆலோசனை!

வெள்ளி, 17 பிப் 2017

தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆலோசனைக் கூட்டத்தில் உளவுத்துறை ஐ.ஜி., டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும் சட்டம்-ஒழுங்கு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.,க்களின் வாகனங்கள் மட்டுமே நாளை அனுமதிக்கப்படும். பார்வையாளர்களுக்கு நாளை தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.