ரியல் எஸ்டேட்: தனியார் பங்கு 26% உயர்வு!

வெள்ளி, 17 பிப் 2017

கடந்த 2016ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் பங்குகளில் தனியாரின் முதலீடு 26 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான குஷ்மன் அண்ட் வேக்பில்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு ரியல் எஸ்டேட் துறையில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தனியார் பங்குகளின் அளவு 26 சதவிகிதம் அதிகரித்து ரூ.39,900 கோடியாக உள்ளது. இதே காலத்தில், ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 5 சதவிகிதம் அதிகரித்து 119 ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டின் ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில் மும்பையின் பங்கு 32 சதவிகிதமாக உள்ளது. கடந்த ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் சராசரி மதிப்பு ரூ.280 கோடியில் இருந்து ரூ.340 கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டில், குடியிருப்புத் திட்டங்கள் அதிகபட்சமாக 53 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ளன. இது, கடந்த ஆண்டைவிட 5 சதவிகிதம் அதிகமாகும். முதலீடு செய்வதில் தனியார் பங்குகளின் அணுகுமுறை வித்தியாசமானது. அதாவது, நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்யப்படும்.