தந்தை பெயரைச் சொல்லுங்கள் : லாலுபிரசாத் யாதவ்

வெள்ளி, 17 பிப் 2017

ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ், பிரதமரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஹர்தோயில் நடந்த பேரணியில், தான் உத்தரப்பிரதேசத்தின் தத்துப்பிள்ளை எனவும், உத்தரப்பிரதேச மாநிலம் அவருடைய தாய், தந்தை போன்றது. அதை விட்டு விலக முடியாது என பிரதமர் பேசினார். இதையடுத்து, ‘எப்போது உத்தரப்பிரதேசம் அவரை தத்தெடுத்தது? வாக்குச் சேகரிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்தோடு தன்னை தொடர்புபடுத்திக் கொள்கிறார். அவர் உத்தரப்பிரதேசத்தின் தத்துப்பிள்ளை என்றால் அவருடைய தகப்பன் பெயர் என்ன?’ என, லாலுபிரசாத் யாதவ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய சுஷில் மோடி, ‘லாலு இப்படியான வசை மொழியை பயன்படுத்துவது புதிதல்ல. மக்களை அவரை ஒரு பொருட்டாக நினைப்பதே இல்லை. உண்மையில், வாக்காளர்கள்தான் தாய் தந்தை. பாஜக உத்தரப்பிரதேச தேர்தல்களில் வெல்லப்போகிறது என்பது தெரிந்துதான் லாலு இப்படிப் பேசியிருக்கிறார்’ என்றார்.