நயன்தாரா: மாற்றத்துக்கான மாடல் அழகி!

வெள்ளி, 17 பிப் 2017

டோரா டீசரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா வந்துவிட்டார். ஆம், வழக்கமாக பிடித்த நடிகர்/நடிகை நடித்த படத்தின் டீசரைத்தான் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இம்முறை டோரா திரைப்படத்தில் நயன்தாராவின் லுக் எப்படி இருக்கப்போகிறது? என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை நயன்தாரா பூர்த்திசெய்துவிட்டார். ஐயா படத்துக்குப் பிறகு, குறிப்பிட்ட உடல் அளவை நயன்தாரா மாற்றவே இல்லை.

ஒரு ஹீரோ எப்படி மீசை வைத்து ஒரு கெட்-அப், மீசை இல்லாமல் ஒரு கெட்-அப் என நடிக்கிறாரோ, அதேபோல் மாடர்ன் டிரெஸ், புடவை என மாற்றம் கொடுத்துவந்த நயன்தாரா நானும் ரௌடி தான் திரைப்படத்தில் உடலழகில் மாற்றம் காண்பித்தார். அந்த மாற்றம் ரசிகர்களை நயன்தாராவை ரசிக்கும் விதத்திலிருந்து மாற்றியது. புதிய நியமம், இது நம்ம ஆளு, திருநாள், பாபு பங்காரம், இருமுகன், காஷ்மோரா என மீண்டும் அதிகரித்துக்கொண்டே இருந்த நயன்தாராவின் உடல் இப்போது டோரா படத்தில் மீண்டும் மெலிந்திருக்கிறது.

டோரா, ரொமாண்டிக் திரைப்படமாக இல்லாவிட்டாலும் அவரது மெலிந்த உடல்தோற்றத்துக்கும், கேமரா முன்பு அவர் தன்னை பிரசெண்ட் செய்துகொள்ளும் விதத்துக்கும் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் அவருக்கு ரசிகைகளாகிக்கிடக்கின்றனர்.(நயன்தாரா பயன்படுத்தும் கம்மல் உட்பட்ட இதர பொருட்களுக்கான மார்கெட்டே தனி)

டோரா டீசர்