எம்.எல்.ஏ.,க்களுக்கு காங்கிரஸ் கொறடா உத்தரவு!

வெள்ளி, 17 பிப் 2017

நாளை கூடவிருக்கும் சட்டசபைக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று, தமிழக காங்கிரஸ் கொறடா விஜயதரணி உத்தரவிட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. நாளை அந்த அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துகிறது. இதன் காரணமாக, சட்டசபைக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் காங். எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொறடா உத்தரவை மீறினால் எம்.எல்.ஏ.,க்கள் பதவி பறிபோகும் வாய்ப்புக்கூட உண்டு என்பதால், காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.,க்களும் நாளைய கூட்டத்தில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக-வின் அனைத்து உறுப்பினர்களுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் 124 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினாலும் 18 எம்.எல்.ஏ.,க்கள் முரண்டுபிடித்து வருவதாகக் கூறப்படுகிறது