பழனிச்சாமிக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ., ஆதரவு!

வெள்ளி, 17 பிப் 2017

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நாகை தொகுதி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுக-வில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பதை முடிவுசெய்ய கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தனது அலுவலகத்தில் கருத்துப் பெட்டி ஒன்றை வைத்திருந்தார். அதில், தான் முதல்வராக யாரை தேர்வு செய்வது என்பது குறித்து மக்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போடலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தமிமுன் அன்சாரி தனது ஆதரவை அவருக்குத் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தமிமும் அன்சாரி வாக்களிப்பார் என்று தெரியவருகிறது.