ஹரி - சூர்யா : பயணங்கள் முடிவதில்லை!

வெள்ளி, 17 பிப் 2017

தமிழ் திரையுலகில் ஒரு இயக்குநருடன் ஒரே கதாநாயகன் பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றுவது அரிதான விஷயம். ரஜினிகாந்த் மற்றும் S.P.முத்துராமன், கமல்ஹாசன் மற்றும் பாலசந்தர் என சில கூட்டணியில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறையில் இதுபோன்ற கூட்டணியினர் குறைவாகத் தான் இருக்கிறார்கள். அதில் ஹரி மற்றும் சூர்யா தான் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர். சூர்யாவும் ஹரியும் இணைந்து 5 படங்களில் பணிபுரிந்திருக்கிறார்கள். ஆறு, வேலு, சிங்கம் 1,2,3 மற்றும் இன்னும் இரு படங்களில் சேர்ந்து பணியாற்றவுள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவான 5 படங்களும் நல்ல ஹிட். சமீபத்தில் வெளியான ‘சிங்கம் 3’ சூர்யா திரைப்படங்களில் வெகு விரைவாக 100 கோடி வசூல் சாதனை செய்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக ஹரிக்கு சூர்யா ஒரு காஸ்ட்லி காரை பரிசாக வழங்கினார். இவர்கள் இணைந்து பணியாற்றவுள்ள அடுத்த இரண்டு படங்களில் ‘சிங்கம் 4’ திரைப்படமும் ஒன்று. இந்தத் திரைப்படம் வெளியாக 4 ஆண்டுகள் ஆகும் என செய்தியாளர்களிடம் ஹரி தெரிவித்திருக்கிறார். அவர் தற்போது ‘சாமி 2’ படத்தின் வேலைகளில் பிஸியாக உள்ளார். ‘சாமி 2’ முடிந்த பிறகு சூர்யாவுடன் வேறு படத்தில் பணிபுரிய திட்டமிட்டுள்ளார். அதன்பிறகே ‘சிங்கம் 4’ திரைப்பட வேலைகளை தொடர இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.