கிரண் பட்: ஆஸ்கர் பெறும் தமிழன்

புதன், 11 ஜன 2017

கோவை சாயிபாபா காலனி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் பட் என்பவரின் மகன் கிரண் பட் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு முக பாவனைகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றும் தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவின் 2017-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி கலிபோர்னியாவில் கிரண் பட்டுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது. ஹாலிவுட் படங்களான அவெஞ்சர்ஸ், பைரட்ஸ் ஆஃப் தி கரிபீயன், வார்க்ராப்ட், ஸ்டார் வார்ஸ் எபிசோட் 7, ஸ்டார் வார்ஸ் ராக் ஒன் ஆகிய படங்களில் இவரது தொழில்நுட்ப பணி முக்கியமானது. கோவையில் மேல்நிலைக் கல்வி பயின்ற கிரண் பட், கணினி அறிவியல் படிப்பை அமெரிக்காவில் பயின்றவர்.