மீண்டும் களத்தில் ஷரபோவா!

புதன், 11 ஜன 2017

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊக்கமருந்து சோதனையில் டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சிக்கினார். இவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய காரணத்தால் சர்வதேச டென்னிஸ் சங்கம், ஷரபோவாவை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் அவருடைய தடைக் காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வருகிறது.

இதனால் அடுத்து வரும் தொடர்களில் வெற்றிகளை குவிக்க வேண்டும் என கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார். தடைக் காலத்திற்கு பிறகு ஏப்ரல் மாதம் ஜெர்மனியில் நடக்கும் ஸ்டட்கர்ட் கிராண்ட்பிரி டென்னிஸ் போட்டியின் மூலம் மீண்டும் களம் காண முடிவு செய்திருக்கிறார். இதற்கான பயிற்சியில் இருந்து வரும் ஷரபோவா, இந்த தொடரில் ஏற்கனவே மூன்று முறை பட்டம் வென்றிருக்கிறார்.