2400 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை கண்டுபிடிப்பு!

புதன், 11 ஜன 2017

ஈராக் நாட்டில், 2400 வருடங்கள் பழமை வாய்ந்த கல்லறை ஒன்று எலும்புக்கூட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டில் 2400 வருட பழமை வாய்ந்த கல்லறை எலும்பு கூட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விஞ்ஞானிகள்தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பாஸ்டான் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்தக் கல்லறை, அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னனரான அசயிமெனித் பேரரசு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த எலும்புக்கூடு பார்ப்பதற்கு கலை பூர்வமாகவுள்ளது.

இதுபோன்று, கடந்த 2015 ஆம் ஆண்டு செக் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்து அரசின் 4500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றை கண்டுபிடித்தனர். எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குத் தென் மேற்கே அபுசிர் என்ற பகுதியில் இருந்தநெக்ரோபொலிஸ் என்ற இடத்தில் இந்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அரசின் கல்லறைக்குள் சுண்ணாம்புக் கல் மற்றும்செப்பினால் ஆன 30 கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அனால், இந்த கல்லறையில் இதுபோன்ற கருவிகள் எதுவுமில்லை என்றாலும், இது ஆராய்ச்சிக்கு உதவும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதற்கு முன்பு, கடந்த 2013 ஆம் ஆண்டு, 8500 வருடங்கள் பழமையான மனித எலும்புகள் இஸ்தான்புலில் கண்டுபிடிக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.