ஜெ’ மரணத்தில் மர்மம்: நீதிமன்றம் புது உத்தரவு!

புதன், 11 ஜன 2017

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரால் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் தோழி கீதா தொடுத்த வழக்கில், சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், ராமமோகன் ராவ், ஷீலா பாலாகிருஷ்ணன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு விசாரணை செய்வதாக நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று ஜெயலலிதாவின் தோழி கீதா தரப்பில் இன்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. மாநகர காவல் துறை ஆணையர், தமிழக தலைமை காவல் துறை இயக்குனர், தலைமை செயலாளர் ஆகிய உயரதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று நீதிபதி சந்திரன் தெரிவித்தார். அதன் பின்னர் இது குறித்து விசாரிப்பதாக கூறிய நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.