மம்முட்டியுடன் இணையும் சிம்பு

புதன், 11 ஜன 2017

தெரியாத மொழி எனும் தடையைத் தாண்டி தமிழகத்திலும் ப்ளாக்பஸ்டர் படமானது பிரேமம். மலரே பாடல் ஒலிக்காத இளைஞர்களின் செல்போன்களே இல்லை, என சொல்லும் அளவுக்கு இருந்தது பிரேமம் படத்தின் ரீச். பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது அடுத்த படத்தின் கதைக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக நேரம் எடுத்துள்ளார். இப்போது அந்த படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படத்தினை தமிழிலில் இயக்கவுள்ளார், இதில் மலையாளத்தின் முன்னணி நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் எனவும், அவருடன் தமிழின் முன்னணி நடிகரும் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் அல்போன்ஸ் புத்திரன் சிம்புவினை சந்தித்துள்ளார். அல்போன்ஸ் புத்திரன் கூறிய கதையில் சிம்பு மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும் தெரிகிறது. எனவே அந்த தமிழ் நடிகர் சிம்புவாக இருக்கலாம் என செய்தி வெளியாகியிருக்கிறது. எது எப்படியோ அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகும் வரை நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.