இன்றைய சினிமா சிந்தனை

புதன், 11 ஜன 2017

அமெரிக்க இயக்குநர்களில் பன்முகம் கொண்டவர், மாயா டெரன். இவர் இயக்கம், நடனம், எழுத்து மற்றும் புகைப்படத்துறை உள்ளிட்ட பல தளங்களில் இயங்கி வந்தார். தன் ஒவ்வொரு படங்களிலும் புதுமையான முயற்சியினை மேற்கொள்ளும் பழக்கமுடையவர். சுயாதீன திரைப்படங்களையே விரும்பும் மாயா, ஹாலிவுட்டுக்கு எதிரானவர் என்று கூறப்படுகிறார். அதற்கு அவர் கூறிய ஒரு கூற்று நம்மை சிந்திக்க வைக்கும் விஷயமும் கூட.

ஹாலிவுட்டில் உதட்டுச் சாயத்துக்கு செலவு செய்யும் பணத்தில் நான் எனது படத்தை முடித்து விடுவேன்

வீண் பிரம்மாண்டங்களுக்கு செலவு செய்வதை விட கலையை வளர்க்க முற்பட வேண்டும் என்ற மாயாவின் கூற்று வரவேற்கத்தக்கது.